தேங்காய்ப் பாலுடன் சேவை
- சேவைமேஜிக் சேவை - 900 கிராம்
- தேங்காய்- 2
- ஏலக்காய் பொடி -கால் தேக்கரண்டி
- சர்க்கரை - 300கிராம் (தேவைக்கேற்ப)
- முந்திரி திராட்சை (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை:
தேங்காயை துருவி, நீர்விட்டு நன்றாக மிக்சியில் அரைத்து, சக்கையை வடிகட்டி பாலை சேகரிக்கவும். பிறகு ஏலக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைக்கவும். நன்றாகக் கொதிக்கும்வரை விடாமல், கொதிவரும் சமயத்தில் இறக்கவும்.
முந்திரி திராட்சையுடன் அலங்கரித்து, சேவையுடன் பரிமாறவும்.


Posts

