தக்காளி சேவை
தேவையானவை:
- சேவைமேஜிக் சேவை - 900 கிராம்
- தக்காளி (பெரியது - துண்டுகளாக வெட்டியது) - 7
- கடுகு - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 6 (நீளவாக்கில்வெட்டியது)
- சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை,கொத்தமல்லி
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சேவை தயாரித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு சோம்பு தாளித்து, கடலைப் பருப்பைப் போடவும். பின்பு துண்டாக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். இப்போது தக்காளியையும் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைத்து, 5 நிமிடம் வாணலியை மூடிவைக்கவும். பின்பு ஆறவிட்டு சேவை கலந்து கறிவேப்பிலை கொத்தமல்லியுடன் பரிமாறவும்.


Posts

