புளி சேவை
தேவையானவை:
- சேவைமேஜிக் சேவை - 900 கிராம்
- புளி - எலுமிச்சை அளவு (கரைத்தது)
- உளுந்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
- வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 4
- மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- உப்பு - தேவைக்கேற்ப
பொடியாக அரைக்க:
- மல்லி (தனியா) - 4 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
- வெந்தயம் — அரை தேக்கரண்டி
- பெருங்காயப்பொடி -ஒரு சிட்டிகை
- மிளகாய் வற்றல் - 4
- தேங்காய் துருவல்- 1 தேக்கரண்டி
செய்முறை:
பொடியாக அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து,பிறகு அதில் உளுந்தம்பருப்பு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்பு அதில் புளிக் கரைசலை ஊற்றவும். அரைத்து வைத்த பொடியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து புளிக்கரைசலில் போட்டு நன்றாக எண்ணெய் மிதக்கும் அளவு கொதிக்க விடவும். நன்றாக ஆறிய பின் வேர்க்கடலையுடன் கலந்து சேவைக்குள் கொட்டிக் கலந்து பரிமாறவும்.


Posts


February 23rd, 2008 at 3:27 pm
hi
nice for indian recipes like preparing the indian style so i need to purchase these Nwe home so kaidly send your chennai branch address including the cost of the product ok…
Regards
Dhanya