சேவைமேஜிக் குக்கர்கள் 1000-ஐத் தாண்டியது

இன்று சேவைமேஜிக் தானியங்கி சேவை குக்கர் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியது: 1000-ஆவது சேவைமேஜிக் இன்று நியூஹோம் தொழிலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வாரம் சேவைமேஜிக் தன் பொது வெளியீட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில் இது மேலும் சிறப்பான செய்தியாகிறது. அத்துடன், இந்த வாரத்தில் சேவை மேஜிக் தமிழகத்தின் தலைநகரில் தன் பாதங்களைப் பதித்துள்ளது.

முதல் 500 சேவைமேஜிக் குக்கர்களைத் தயாரிக்க சுமார் 250 நாட்கள் பிடித்தன. அடுத்த 500-ஐ சுமார் 100 நாட்களில் நியூஹோம் தயாரித்தது. வரும் மூன்றாவது 500-ஐ 60 நாட்களிலும், நான்காவது 500-ஐ 30 நாட்களிலும் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நியூஹோம், தன் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

2 Responses to “சேவைமேஜிக் குக்கர்கள் 1000-ஐத் தாண்டியது”

  1. ila Says:

    வாழ்த்துக்கள்!
    ஒரு பில்லியனாவது குக்கரை சீக்கிரமே அனுப்பி வைக்க வாழ்த்துகிறேன்!

  2. SP.VR.SUBBIAH Says:

    அடுத்து ஒரு நாளில் 500 குக்கர்களைத் தயாரிக்கும் நிலைக்கு உயர வாழ்த்துக்கள்!

Leave a Reply