Archive for the ‘செய்தி’ Category

பொள்ளாச்சியில் சேவைமேஜிக் விற்பனை தொடக்கம்

Thursday, February 21st, 2008

பொள்ளாச்சியில் உள்ள பிரபலமான வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடிகளில் சேவைமேஜிக் தானியங்கி குக்கர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள்:

  1. சேது & கோ (போன்: 220031)
  2. சுலோசனா பர்னிச்சர் அண்டு எலக்ட்ரானிக்ஸ் (போன்: 238832)

சேவைமேஜிக் குக்கர்கள் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது

Saturday, February 16th, 2008

நியூஹோமின் தொழிற்சாலையிலிருந்து 500வது சேவைமேஜிக் குக்கர் இன்று அனுப்பிவைக்கப்பட்டது. தயாரிப்புத் திறன் அதிகரிக்கப்பட்டதை இந்த முக்கியமான மைல்கல் குறிக்கிறது. மாதத்திற்கு 250 குக்கர்கள் என்ற எண்ணிக்கையை சமீபத்தில் எட்டியிருப்பதால் உலகெங்கும் உள்ள சேவைமேஜிசியன்களின் எண்ணிக்கையை நான்கு இலக்கத்தில் காணுவது இனி ஓரிருமாதங்களிலேயே சாத்தியமாகும். வெகுவிரைவில் மாதத்துக்கு 500 என்ற எண்ணிக்கையைத் தொடத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அன்பான வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றி.

விற்பனையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நன்றி.

குழுவுக்காக சேவைமேஜிக் குக்கர் கொள்முதல்

Friday, February 8th, 2008

சில்லரை விற்பனையில் சேவைமேஜிக் தானியங்கி சேவை குக்கர் கிடைப்பதோடு, நிறுவனங்கள்/குழுக்கள் தங்கள் உறுப்பினர்களுக்காக மொத்தமாகக் கொள்முதல் செய்வதும் நடைபெறுகிறது. நேற்று மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நிறுவனம் இப்படி தங்கள் உறுப்பினர்களுக்காக 50 சேவைமேஜிக் குக்கர்களைக் கொள்முதல் செய்துள்ளது.

வீட்டில் பயனாகக்கூடியதும், ‘இது எங்களிடம் ஏற்கனவே இருக்கிறது’ என்று கூறி, மாற்றுப் பரிசு/ஈடாகப் பணம் கேட்கவாய்ப்பில்லாததும் சேவைமேஜிக் குக்கரைத் தேர்வுசெய்ய முக்கியக் காரணங்கள் என்று நிறுவனத் தலைவர் குறிப்பிட்டார்.

சிறப்புவிலையில் குழுவுக்காகக் கொள்முதல் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள:

செல்லதுரை : எண் 9442609823

விளம்பரத்துக்கான துண்டுப்பிரசுரம் (Tamil Leaflet)

Tuesday, January 8th, 2008

சொடுக்கினால் பெரிதாக்கிப் பார்க்கலாம்:

Leaflet Tamil Front page

Leaflet Tamil back page

சேவைமேஜிக் தொலைக்காட்சி விளம்பரம்

Saturday, January 5th, 2008

கேபிள் டிவியில் ஒளிபரப்ப ஒரு விளம்பரப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் இயங்கும் பாலிமர் சேனல் வழியாக தற்போது ஒளிபரப்பாகிறது. நேரங்கள் காலை: 7:00, 11:00, மாலை: 3:00, 7:00, 11:00

SevaiMagik Video Commercial

விரைவில் மற்ற  நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.