குறுகியகால அறிமுக சலுகை
Thursday, September 13th, 2007சேவைமேஜிக் சேவை குக்கர் சோதனை-விற்பனை கட்டத்தைத் தாண்டி பீடுநடை போடுகிறது. புதுமைவிரும்பிகளான எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த வெற்றியில் பெரும் பங்கு உண்டு. இந்த கட்டத்தில் அளிக்கப்பட்ட பயனுள்ள ஆலோசனைகளில் பெருமளவு ஏற்கனவே நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளன. சில விரைவில் நடைமுறைப் படுத்தப்படும். அதற்காக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி!
இத்தனை நாள் நடந்த, வீட்டில்-செயல்விளக்கம்-விற்பனை என்ற நிலையிலிருந்து, ஷோரூமில்-செயல்விளக்கம்-விற்பனை என்ற அடுத்த கட்டத்துக்கு மாறுகிறோம். இத்தனை நாள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டதில் கிடைத்த அனுபவமும் நம்பிக்கையும் இந்த மாற்றத்தின் பின்புலமாக இருக்கின்றன.
இனிமேல் அதிகபட்ச சில்லரை விலை குறிக்கப்பட்டு சேவைமேஜிக் விற்பனை செய்யப்படும். இந்த மாற்றத்தைக் குறிக்கும் விதமாக நியூஹோம் சிறப்புச் சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். டாடாபாத்தில் உள்ள ஷோரூமில் செயல்விளக்கம் மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இங்கு வாங்கப்படும் சேவைமேஜிக் குக்கருக்கு அதிகபட்ச சில்லரை விலையிலிருந்து ரூபாய் 500 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகை குறுகிய காலத்திற்கே, கையிருப்பு உள்ளவரை மட்டுமே.



Posts

