Archive for the ‘சமையல்குறிப்பு’ Category

சினேகிதி தீபாவளி பரிசுப் போட்டி

Monday, September 29th, 2008

Snekithi-nov-contest

சேவைமேஜிக் பரிசு: மஞ்சுளா ரமேஷ்-n சினேகிதி நடத்தும் நவராத்திரி சமையல் குறிப்புப் போட்டி.

Sunday, August 31st, 2008

Snekithi Contest

புளி சேவை

Tuesday, September 11th, 2007

Tamarind Sevai

தேவையானவை:

  1. சேவைமேஜிக் சேவை - 900 கிராம்
  2. புளி - எலுமிச்சை அளவு (கரைத்தது)
  3. உளுந்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
  4. வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
  5. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  6. மிளகாய் வற்றல் - 4
  7. மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை
  9. உப்பு - தேவைக்கேற்ப

பொடியாக அரைக்க:

  1. மல்லி (தனியா) - 4 தேக்கரண்டி
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
  4. வெந்தயம் — அரை தேக்கரண்டி
  5. பெருங்காயப்பொடி -ஒரு சிட்டிகை
  6. மிளகாய் வற்றல் - 4
  7. தேங்காய் துருவல்- 1 தேக்கரண்டி

செய்முறை:

பொடியாக அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து,பிறகு அதில் உளுந்தம்பருப்பு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்பு அதில் புளிக் கரைசலை ஊற்றவும். அரைத்து வைத்த பொடியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து புளிக்கரைசலில் போட்டு நன்றாக எண்ணெய் மிதக்கும் அளவு கொதிக்க விடவும். நன்றாக ஆறிய பின் வேர்க்கடலையுடன் கலந்து சேவைக்குள் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

வெஜிடபுள் சேவை

Tuesday, September 11th, 2007

Vegetable Sevai

தேவையானவை:

  1. சேவைமேஜிக் சேவை - 900 கிராம்
  2. காய்கறிகள்: கேரட், பீன்ஸ், பட்டாணி - 300 கிராம்
  3. நெய் - 4 தேக்கரண்டி
  4. சீரகம் - 2 தேக்கரண்டி
  5. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  6. பச்சை மிளகாய் - 6 (நீளவாக்கில் நறுக்கியது)
  7. புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை
  8. உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நெய்யை அடுப்பில் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், மிளகாய, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, வெந்தபின் சேவையை கொட்டிக் கலக்கவும். புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை கலந்து பரிமாறவும்.

தேங்காய்ப் பாலுடன் சேவை

Tuesday, September 11th, 2007

Cocunut-milk Sevaiதேவையானவை:

  1. சேவைமேஜிக் சேவை - 900 கிராம்
  2. தேங்காய்- 2
  3. ஏலக்காய் பொடி -கால் தேக்கரண்டி
  4. சர்க்கரை - 300கிராம் (தேவைக்கேற்ப)
  5. முந்திரி திராட்சை (விருப்பத்திற்கேற்ப)

செய்முறை:

தேங்காயை துருவி, நீர்விட்டு நன்றாக மிக்சியில் அரைத்து, சக்கையை வடிகட்டி பாலை சேகரிக்கவும். பிறகு ஏலக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைக்கவும். நன்றாகக் கொதிக்கும்வரை விடாமல், கொதிவரும் சமயத்தில் இறக்கவும்.

முந்திரி திராட்சையுடன் அலங்கரித்து, சேவையுடன் பரிமாறவும்.