Archive for the ‘சமையல்குறிப்பு’ Category

தக்காளி சேவை

Tuesday, September 11th, 2007

Tomato Sevai

தேவையானவை:

  1. சேவைமேஜிக் சேவை - 900 கிராம்
  2. தக்காளி (பெரியது - துண்டுகளாக வெட்டியது) - 7
  3. கடுகு - அரை தேக்கரண்டி
  4. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
  6. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  7. பச்சை மிளகாய் - 6 (நீளவாக்கில்வெட்டியது)
  8. சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை தேக்கரண்டி
  9. கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை,கொத்தமல்லி
  11. உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சேவை தயாரித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு சோம்பு தாளித்து, கடலைப் பருப்பைப் போடவும். பின்பு துண்டாக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். இப்போது தக்காளியையும் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைத்து, 5 நிமிடம் வாணலியை மூடிவைக்கவும். பின்பு ஆறவிட்டு சேவை கலந்து கறிவேப்பிலை கொத்தமல்லியுடன் பரிமாறவும்.

இனிப்பு சேவை

Tuesday, September 11th, 2007

தேவையானவை:

  1. சேவைமேஜிக் சேவை - 200 கிராம்
  2. கரும்புச் சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை) - 50 கிராம் (அல்லது ருசிக்கேற்ப)
  3. ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
  4. தேங்காய்த் துருவல் - 100 கிராம்
  5. வறுத்த முந்திரி - 10

செய்முறை:

சேவையுடன் எல்லாப் பொருட்களையும் கலந்து பரிமாறுங்கள். செய்வதற்கு எளிதாகவும் சாப்பிட மிகவும் சுவையாகவும் உள்ள ஒரு இனிப்பு. சாப்பிடுவதற்கு சற்றுமுன் இதைக் கலக்கிக் கொள்வது நல்லது. நீண்டநேரம் முன்பு தயாரித்து வைத்தால் சற்றுக் கடினமாக இருக்கும்.

எலுமிச்சை சேவை

Tuesday, September 11th, 2007

Lemon Sevai

தேவையானவை:

  1. சேவைமேஜிக் சேவை - 900கிராம்
  2. எலுமிச்சம்பழம் - 2 (அல்லது 25 மி.லி. சாறு)
  3. கடுகு - அரை தேக்கரண்டி
  4. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
  6. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  7. மிளகாய் வற்றல் - 6
  8. முந்திரிப் பருப்பு -தேவைக்கேற்ப
  9. மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  10. தேங்காய்த் துருவல் - அரைமூடி
  11. கறிவேப்பிலை
  12. உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சேவையில் எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் கலந்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, கடலைப் பருப்பு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி, அதில் சேவையைக் கொட்டிக் கலக்கவும். பின்பு அதில் தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி கலந்து பரிமாறவும்.